கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு போட்டிகள் நாள்: 27.07.2024 இடம்: கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி

கவிஞர் தமிழ்ஒளி அறக்கட்டளை

கவிஞர் தமிழ்ஒளி நினைவுபோற்றும் போட்டிகள்

நாள்: 15.10.2025

இடம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லூரி, பேரூர், கோயம்புத்தூர்

கவிஞர் தமிழ்ஒளி

(21.09.1924 – 29.03.1965)

தமிழ்ஒளி அவர்கள் தென்னாற்காடு மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் அகரம் என்னும் சிற்றூரில் சின்னையா, செங்கேணி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். விசயரங்கம் என்பது தமிழ் ஒளியின் இயற்பெயர் ஆகும்.. தமது தொடக்கக் கல்வியைப் புதுவை முத்தியாலுப்பேட்டை நடுநிலைப் பள்ளியில் கற்றார். உயர்கல்வியைக் கலவைக் கல்லூரியில் படித்தார். மாணவராயிருந்தபோதே பாரதியார், பாரதிதாசன் கவிதைகளால் ஈர்க்கப்பெற்றார்.

கவிஞர் தமிழ்ஒளி பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர். கவிதைகள் மட்டுமல்லாது கதைகள், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள், மேடை நாடகங்கள், குழந்தைப் பாடல்கள் எனப் பல இயற்றியவர். அவரின் கவிதைகள் தனித்தன்மை வாய்ந்தவை.

அவர் பொதுவுடைமைக் கொள்கைகளை உயிர்மூச்சாகக் கொண்டிருந்தவர். உலகத் தொழிலாளர்களின் உரிமை நாளான மே நாளை வரவேற்றுப் பாடியவர்.

தமிழ்ஒளியின் சிறுகதைகளில் வரும் பாத்திரங்கள் பெரும்பாலோர் ஒடுக்கப்பெற்றவர்கள், தொழிலாளர்கள், போராளிகள் என அடித்தட்டு மக்களாகவே இருந்தார்கள்.

கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் பெயரில் தமிழ் வளர்ச்சித் துறையில் ஓர் அறக்கட்டளை நிறுவி பள்ளி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கு ம் வகையில், ஆண்டுதோறும் பள்ளி மாணவர்கள் கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் தெரிவு செய்யப்பெற்ற பாடல்களை ஒப்பித்தல் போட்டிகள் நடைபெறும்.

கவிஞர் தமிழ்ஒளி கவிதை ஒப்பித்தல்

6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை

தமிழ்ஒளி கவிதை ஒப்பித்தல் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ / மாணவியர் tamiloli.in இணையத்தில் வெளியிடப்பெற்றுள்ள கவிதைகளைப் பதிவிறக்கம்செய்து தாங்கள் விரும்பியவாறு கவிதையினை மனப்பாடம் செய்து, போட்டியில் ஒப்பித்தல்வேண்டும்.  அக்கவிதைகளைக் குறைந்தது 3 மணித்துளிகள் ஒப்பித்தல்வேண்டும்.  குறைந்தது 25 வரிகள் கவிதை ஒப்பித்தல்வேண்டும்.

பாவேந்தர் பாரதிதாசன் பேச்சுப் போட்டி

 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை

பேச்சுப் போட்டி - தலைப்புகள்

  1. தமிழின் இனிமை
  2. வீரத்தாய்
  3. மானிடசக்தி
  4. தமிழ்ப்பேறு
  5. குடும்ப விளக்கு
  6. தமிழனுக்கு வீழ்ச்சியில்லை
  7. சேரதாண்டவம்
  8. இன்பத்தமிழ்

பாவேந்தர் பாரதிதாசன் கவிதைப் போட்டி (எழுதுதல்)

9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை

கவிதைப் போட்டி – பாவேந்தர் கவிதைகள்

  1. பேரிகை
  2. ஆய்ந்துபார்
  3. கூவாய் கருங்குயிலே
  4. பாரதி உள்ளம்
  5. வள்ளுவர் வழங்கிய முத்துகள்
  6. அறம் செய்க
  7. கூடித்தொழில் செய்க
  8. சாய்ந்த தராசு
முனைவர்
ந. அருள்

இயக்குநர்

தமிழ் வளர்ச்சித் துறை

சென்னை

முனைவர் இரா. அன்பரசி

துணை இயக்குநர்

தமிழ் வளர்ச்சித் துறை

கோயம்புத்தூர்